மகான் படதோல்விக்கு நீங்கதான் காரணம்.. எல்லாத்தையும் மறைப்பதால் விக்ரமிற்கு வந்த வினை

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பு, வித்தியாசமான பல கெட்டப் என்று ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரம். அப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளிவந்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை.

ஒரு விதத்தில் இந்த படத்தின் தோல்விக்கு நடிகர் விக்ரமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் ரசிகர்களை சென்றடைவதற்கு படத்திற்கான பிரமோஷன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அஜித், நயன்தாரா போன்றோர் இதுபோன்ற ப்ரோமோஷன்களுக்கு வருவது கிடையாது.

தற்போது அதைத்தான் விக்ரமும் செய்து வருகிறார். ஒரு படம் முடிந்த பிறகு அடுத்த படத்திற்கான வேலைகளை பார்க்க அவர் சென்று விடுகிறார். அப்படி அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர் அதிகமாக பொதுவெளியில் தென்படுவது கிடையாது.

ஏனென்றால் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றவாறு அவர் தன்னுடைய லுக்கை மாற்றிக் கொள்வார். அதனால்தான் அவர் அந்த ரகசியம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக மீடியாக்களின் முன் வருவதை தவிர்த்து வருகிறார். இதுவே அவர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா திரைப்படத்தின் பிரமோஷனில் அவர் கலந்து கொள்வாரா என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு முன்பு கூட விக்ரம் பிதாமகன், ஐ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -