ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பாடல்களை வெளியிடவுள்ளனர். இந்நிலையில் தற்போது அதேநாளில் இப்படத்தின் டிரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.