ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் டிரைலரும் வெளியானது. விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த ட்ரைலர் 3 நாட்களில் 30 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.விக்ரமின் 10 எண்றதுக்குள்ள தோல்வியடைந்தும் இன்னும் மாஸ் குறையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.