Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரமை சோதிக்கும் ஒரு படம்.. சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்த்தால் வெளியீட்டுக்கே தடுமாற்றம்!
விக்ரம் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஏன் பல வருடங்கள் கடந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.
விக்ரம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார் விக்ரம்.
என்னதான் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் ஒரு வெற்றிப்படம் கொடுக்க இவ்வளவு சிரமப்படுகிறார். அதற்கு காரணம் சமீப காலமாக விக்ரமின் பட தேர்வுகள் சரியாக அமையவில்லை என்று கூட சொல்லலாம்.
இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 7 கெட்டப்புகளில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அஜய் ஞானமுத்து ஒரு திறமையான இயக்குனர் என்பதால் அவர் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளாராம். வெறும் 15 நாட்கள் மட்டுமே சூட்டிங் உள்ள நிலையில் இன்னும் படம் முடிவடையாமல் சோதித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு காரணம் அந்த 15 நாள் காட்சிகளும் ரஷ்யாவில் எடுக்க இருந்ததால் தற்போது அதற்கான சூழ்நிலை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர். இதனால் ரஷ்யாவை போல செட் போட முடிவு எடுத்து விட்டார்களாம்.
இந்த படத்தை விக்ரம் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
