Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தூசு தட்டப்படும் விக்ரமின் 350 கோடி பட்ஜெட் பிரம்மாண்ட திரைப்படம்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் சீயான் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் அவரது அர்ப்பணிப்பும் மிகவும் அபாரமானது. ஷங்கரின் ஐ படத்தில் இவர் செய்த காரியத்தை எந்த ஒரு நடிகர்களும் செய்ய மாட்டார்கள்.
நினைத்தவுடன் வெயிட்டை குறைப்பது, வெயிட்டை ஏற்றுவது என அவ்வளவு சிரமப்பட்டு நடித்தார். தற்போது அதே போல் மீண்டும் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுக்க உள்ளாராம்.
1964 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் மகாவீர் கர்ணன். அதேபோல் மகாவீர் கர்ணன் கதையை மையப்படுத்தி நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தின் போட்டோ ஷுட் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 350 கோடி அந்த படத்தை தயாரிக்க முன்வந்தது நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம். போட்டோ ஷூட் மட்டுமே நடந்த நிலையில் உள்ள ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அந்த படம் கைவிடப்பட்டதா என சந்தேகத்தை கிளப்பியது.
இந்நிலையில் மீண்டும் படத்தை தூசி தட்ட உள்ளார்கள். மலையாள இயக்குனர் ஆர்எஸ் விமல் என்பவர் இந்த படத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளார். கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம், துரியோதனன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த படத்தைப் பேன் இந்தியா படமாக வெளியிட முடிவு செய்துள்ளார்கள். கோப்ரா, சியான்60 ஆகிய படிப்புகளை முடித்த பிறகு உடனடியாக கர்ணன் படத்தில் கலந்து கொள்கிறார் விக்ரம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
