Tamil Cinema News | சினிமா செய்திகள்
5 வருடங்களுக்குப் பிறகு மாஸ் சாதனை படைத்த ஐ.. கலர் மங்கிப் போனாலும் தங்கம் தங்கம் தான்!
விக்ரம் சினிமா வரலாற்றில் அதிக ரிஸ்க் எடுத்த திரைப்படங்களில் ஒன்று ஐ. ஷங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவான திரைப்படம்.
மாபெரும் வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக கொஞ்சம் சறுக்கியது. இருந்தாலும் விக்ரம் முயற்சியை பலரும் பாராட்டினர்.
அதிலும் கூனன் கதாபாத்திரத்திற்கு தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து முயற்சி செய்தார். அந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டினார் விக்ரம்.
அதுவரை வந்த இந்திய படங்களிலேயே மிகவும் பிரமாண்ட படமாக அமைந்தது ஐ. இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ஆனால் எங்கேயுமே போதுமான வசூலை பெறவில்லை. தெலுங்கு சினிமாவில் இந்த படம் அட்டர் ஃப்ளாப். இதனால் இந்த படத்தின் டிவி சாட்டிலைட் உரிமையை கூட வாங்காமல் வைத்திருந்தனர்.
தற்போது ஐந்து வருடங்கள் கழித்து ஐ படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது. இதை கடந்த வாரம் ஸ்டார் மா எனும் சேனலில் ஒளிபரப்பினார்கள். எதிர்பார்க்காத வகையில் 11.3 டிஆர்பி ரேட்டிங் பெற்று அனைவரையும் அசத்தியுள்ளது.
இந்த படம் ஏன் தோல்வியுற்றது என்பது தற்போது வரை யாருக்குமே தெரியவில்லை.
