சரித்திர படத்தில் “சியான்” விக்ரம்?

Vikram-Histrorical Film1990-ல் என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானவர் விக்ரம். அதையடுத்து, தமிழ்,தெலுங்கு, மலையாளம் என சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்த பிறகு 1999-ல் பாலா இயக்கிய சேது படத்தில் நடித்தார். அந்த படம்தான் அவரை உலகுக்கு முழுசாக அடையாளம் காட்டியது. அதனால்தான் இப்போதுவரை விக்ரமின் முதல் படம் சேது என்றே பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்பிறகு பிதாமகன், காசி, அந்நியன் என மாறுபட்ட வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் தானும் ஒருவராகி விட்டார் விக்ரம். மேலும், அவர் நடித்த படங்களில் ராவணன், டேவிட் ஆகிய படங்கள் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகின. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு நேரடி இந்திப்படத்தில் நடிக்கப்போகிறார் விக்ரம்.

இந்தி சினிமாவில் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை பிரபல இந்திப்பட இயக்குனர் ஓம் ராவுத் என்பவர் இயக்குகிறாராம். கதையைக்கேட்டு அப்படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்ட விக்ரம், தமிழில் கைவசமுள்ள மர்ம மனிதன், கருடா ஆகிய படங்களை முடித்ததும் இந்த ஆண்டு இறுதியில் அந்த இந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

comments

More Cinema News: