Videos | வீடியோக்கள்
ஏழு கெட்டப்புகளில் மிரட்டிவிட்ட விக்ரம்.. ஏ ஆர் ரகுமான் இசையில் தெறிக்கும் கோப்ரா டீசர்
நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் ஒரே படத்தில் அதிகமான கெட்டப்புகளில் நடிக்கும் படம் கோப்ரா தான். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே 7 கெட்டப்புகளில் மிரட்டலாக வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் படப்பிடிப்பை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு தற்போது மீண்டும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு கொண்டாடினர்.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது. இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.
விக்ரமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. அதை கண்டிப்பாக கோப்ரா படம் சரி செய்யும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. ஐ படத்திற்கு பிறகு கோப்ரா படம்தான் விக்ரமின் சினிமா கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக மாறியுள்ளது.
கண்டிப்பாக கோப்ரா படம் விக்ரமுக்கு செம கம்பாக் படமாக இருக்க போகிறது என்பது மட்டும் உறுதி.
