ஏ ஆர் ரகுமான் பிறந்தநாளுக்கு கோப்ரா படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. தொடங்கியது டீசர் கொண்டாட்டம்!

இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அளவுக்கு இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரகுமானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் இசையில் அடுத்ததாக உருவாகயிருக்கும் திரைப்படம் விக்ரம் நடிக்கும் கோப்ரா.

நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் ஒரே படத்தில் அதிகமான கெட்டப்புகளில் நடிக்கும் படம் கோப்ரா தான். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே 7 கெட்டப்புகளில் மிரட்டலாக வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் படப்பிடிப்பை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு தற்போது மீண்டும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு கொண்டாடினர்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது. இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.

விக்ரமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. அதை கண்டிப்பாக கோப்ரா படம் சரி செய்யும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதற்கு ஏற்றார் போல் வருகிற 9-ஆம் தேதி கோப்ரா படத்தின் டீசர் வெளியாக இருப்பதை படக்குழுவினர் ஏ ஆர் ரகுமான் பிறந்த நாளான இன்று போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர்.

cobra-teaser-announcement
cobra-teaser-announcement

மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை தயாரித்து வருவதால் மாஸ்டர் படத்துடன் சேர்ந்து இடைவேளையில் கோப்ரா படத்தின் டீசரும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News