Connect with us
Cinemapettai

Cinemapettai

54 வயதில் சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஹாலிவுட் நடிகர் போல் மிரட்டும் சியான் விக்ரம்.. சாரே! கொல மாஸ்!

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

54 வயதில் சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஹாலிவுட் நடிகர் போல் மிரட்டும் சியான் விக்ரம்.. சாரே! கொல மாஸ்!

சில நடிகர்கள் அவர்களுக்குப் பிடித்த ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் விருப்பமான ஒன்றாக இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருப்பவர் சியான் விக்ரம்.

தன்னுடைய வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வைத்துள்ளார். ஒரு ரசிகர் கூட தனக்கு விக்ரமை பிடிக்காது என்று சொல்லமாட்டார்கள்.

ஆனால் சமீபகாலமாக ஒரு வெற்றி கூட கிடைக்காமல் தடுமாறி வருகிறார். விக்ரம் சினிமாவை விட்டு விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுப்பியுள்ளன.

இந்த நேரத்தில்தான் இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் விக்ரம். இந்த படத்திற்கு கோப்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏழு விதமான கெட்டப்புகளில் தோன்றி அனைவரையும் அசர வைத்தார். தற்போது ஒரு படி மேலே போய் ஐ படத்தை போல மீண்டும் சிக்ஸ்பேக் வைத்து அசத்தி உள்ளார்.

chiyaan-vikram-cobra

chiyaan-vikram-cobra

இந்த புகைப்படம்தான் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. 54 வயதிலும் சிக்ஸ்பேக் வைத்து மிரட்டிய விக்ரமை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top