Connect with us
Cinemapettai

Cinemapettai

ஏலியன் கெட்டப், சிக்ஸ் பேக் உடற்கட்டில் விக்ரம்.. கொல மாஸாக வந்த கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

cobra-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏலியன் கெட்டப், சிக்ஸ் பேக் உடற்கட்டில் விக்ரம்.. கொல மாஸாக வந்த கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது.

கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு அண்மை காலத்தில் எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன. வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது.

எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் முன்னதாக 7 கெட்டப்புகளில் கோப்ரா படத்தின் முதல்பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோப்ரா படக்குழுவினர் கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

cobra-secondlook-vikram

cobra-secondlook-vikram

இந்த போஸ்டரும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். கண்டிப்பாக நீண்டநாள் வெற்றிக்கு காத்துக்கொண்டிருந்த விக்ரமுக்கு கோப்ரா படம் செம வசூல் செய்யும் என்பது மட்டும் உறுதி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top