Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோப்ரா படத்தில் விக்ரமுக்கு 7 கெட்டப் இல்லையாம்! மொத்தத்தையும் கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது.
கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு அண்மை காலத்தில் எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன. வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது.
எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தின் முதல்பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
7 கெட்டப்புகளில் வெளியிடப்பட்ட அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருந்தார் அஜய் ஞானமுத்து.
அதேபோல் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் தும்பி துள்ளல் எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்நிலையில் கோப்ரா படத்தில் சீக்ரெட் ஒன்று வெளியாகியுள்ளது.
விக்ரம் கோப்ரா படத்தில் சுமார் 20 கெட்டப்புகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாகும்போது இதற்கான ஒவ்வொரு கெட்டப்புகளின் புகைப்படங்களும் வெளியாகும் எனத் தெரிகிறது.
