Connect with us
Cinemapettai

Cinemapettai

அசால்ட் சேதுவாக மாறும் விக்ரம்.. சீயான்60 இந்த படத்தின் இரண்டாம் பாகமா?

vikram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசால்ட் சேதுவாக மாறும் விக்ரம்.. சீயான்60 இந்த படத்தின் இரண்டாம் பாகமா?

தற்போதைக்கு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் சீயான்60 படம்தான்.

செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில் அனிருத் இசையமைக்கவுள்ளார். லலித் குமார், விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக இந்த படம் கேங்ஸ்டர் படம் என்பதை படத்தின் அறிவிப்பு வெளியீடு செய்த போஸ்டரிலேயே தெள்ளத்தெளிவாக தெரிந்தது. மேலும் கேங்ஸ்டர் படம் இயக்குவதில் கார்த்திக் சுப்புராஜ் வல்லவர் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் விக்ரம் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் வேறலெவலில் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றி பெற்ற படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசால்ட் சேது கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சீயான்60 விக்ரம் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனேகமாக ஜிகர்தண்டா2 படத்தின் இரண்டாம் பாகமாக கூட இது இருக்கலாம் எனவும் தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top