fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விக்ரம்-துருவ் விக்ரம் இணையும் சீயான்60 படத்தின் டைட்டில் இதுதான்.. ரொம்ப வித்தியாசமா இருக்கே!

vikram-dhruv-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம்-துருவ் விக்ரம் இணையும் சீயான்60 படத்தின் டைட்டில் இதுதான்.. ரொம்ப வித்தியாசமா இருக்கே!

விக்ரம் தனது 60வது படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை யார் இயக்குகிறார்கள், யார் இசையமைப்பாளர் என்கிற விவரத்தை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் நடிக்கும் சியான்60 வது படத்தை பேட்ட, ஜகமே தந்திரம் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளி வந்துள்ளது. இதில் நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளது போஸ்டரிலேயே தெரிகிறது.

அதே போல் இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை எழுதி இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் உடன் அனிருத் மீண்டும் கைகோர்க்கிறார்.

துருவ் விக்ரம் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது. இத்தனைக்கும் அந்த படத்தை பார்த்து பார்த்து ரெடி செய்தவர் விக்ரம் தான். நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமை வைத்து இயக்கும் படத்தின் தலைப்பு திறவுகோல் மந்திரவாதி என வைக்கப்பட்டுள்ளதாம்.

இது தற்காலிக டைட்டில்தான் எனவும் செய்திகள் கிடைத்துள்ளது. இருந்தாலும் தலைப்பை வைத்து பார்க்கும்போது மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பது மட்டும் உறுதி என தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top