Connect with us

சீயான்60 படத்தில் துருவ்-க்கு இப்படி ஒரு வேடமா? அதுக்குத்தான் சிக்ஸ் பேக்கா! ரகசியம் வெளியானதால் படக்குழு அப்செட்

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீயான்60 படத்தில் துருவ்-க்கு இப்படி ஒரு வேடமா? அதுக்குத்தான் சிக்ஸ் பேக்கா! ரகசியம் வெளியானதால் படக்குழு அப்செட்

விக்ரம் தனது 59-வது படமாக“கோப்ரா“படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான்60 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளிவந்தன.

மேலும் இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரையை அடிப்படையாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது.

ஏற்கனவே துருவ், நடித்து வெளிவந்த“ஆதித்ய வர்மா”படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது. இதனால் எப்படியாவது தன்னுடைய மகனுக்கு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து விட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் விக்ரம்.

எனவே அதன் முதல் படியாக தற்போது தன்னுடைய படத்திலேயே முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை கொடுத்துள்ளாராம் விக்ரம். “அப்பா எட்டடி பாய்ந்தால், மகன் 16அடி பாய மாட்டாரா“என்ற கணக்கு தான்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீயான்60 படத்தில் துரு விக்ரம் நடிக்கும் கதாபாத்திரத்தின் ரகசியம் வெளியாகி உள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் இளம் வயது விக்ரமாக ஒரு பாதி வருகிறாராம்.

அதற்காகத்தான் சிக்ஸ்பேக் வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி வெளியானதால் கார்த்திக் சுப்புராஜ் தரப்பு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top