ரசிகர்களை ஏமாற்றிய விக்ரம்.. அதிக லாபத்திற்காக பண்ணும் காரியம்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி திரையரங்குகள் ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களை மூட அரசு உத்தரவிட்டது. அந்த சமயத்தில் வெளியீட்டிற்கு பல படங்கள் தயாராக இருந்தன. ஆனால் தியேட்டர்கள் செயல்படாததால், படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட்டனர்.

கொரோனா பிரச்சனை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் படங்கள் அனைத்தும் வழக்கம் போல் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தியேட்டரில் வெளியானது. மேலும் பெரும்பாலான நடிகர்கள் அவர்களின் படங்களை ஓடிடியில் வெளியிடவே விரும்புகிறார்கள்.

காரணம் தியேட்டரை விட ஓடிடியில் நல்ல லாபம் பார்க்க முடிகிறது என்பதால். அந்த வகையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறது. தற்போது அந்த வரிசையில் பிரபல நடிகர் விக்ரமின் படமும் இணைய உள்ளது.

அதன்படி ஜெகமே தந்திரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் தான் மகான். இப்படத்தில் நடிகர் விக்ரமும் அவரின் மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் மொத்த பணிகளும் முடிந்து தணிக்கைக்காக குழுவினரின் முடிவிற்காக படக்குழுவினர் காத்திருந்தனர். இந்நிலையில் மகான் படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மகான் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்