Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் கவுதம் மேனன் பயங்கர மோதல் – நிறுத்தப்பட்ட துருவநட்சத்திரம் பட ஷூட்டிங் – பரபரப்பு தகவல்கள்
வாலு பட இயக்குநர் விஜய்சந்தருக்குக் கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் பண்ணிவிட்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கப்போனார் விக்ரம். துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிக்கும் அறிவிப்பு வெளியான தினங்களிலேயே அந்தப் படத்தின் டீஸரையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் கௌதம் மேனன்.
இந்நிலையில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறது. கௌதம் மேனன் தரப்பில் இது தற்காலிக பிரேக் என்று சொல்லப்பட்டாலும், துருவ நட்சத்திரம் படக்குழுவினர் வேறு ஒரு தகவலை சொல்கின்றனர். அதாவது பேசியபடி விக்ரமுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதால் GVM-க்கும் விக்ரமுக்கும் பயங்கர மோதல் என்றும் அதனாலேயே படப்பிடிப்பை தொடர விக்ரம் ஒத்துழைக்கவில்லை என்றும் சொல்கின்றனர்.
பனிரெண்டு கோடி சம்பளம் கேட்டு, பத்து கோடி வாங்கிக் கொண்டிருக்கிறார் விக்ரம். கவுதம் மேனன் என்பதால் இன்னும் கூட குறைத்து வாங்கிக் கொள்ள சம்மதித்தாராம் அவர். ஆனால் பேசிய பணத்தை பைசா பாக்கியில்லாமல் கொடுத்துவிட வேண்டும் என்பது அக்ரிமென்ட். ஏனிந்த உஷார்? கவுதம் மேனனின் முந்தைய லட்சணம் அப்படி. சிம்புவுக்கு சம்பள பாக்கி, தனுஷுக்கு சம்பள பாக்கி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்பள பாக்கி, ஹாரிஸ் ஜெயராஜூக்கு சம்பள பாக்கி என்று ஆங்காங்கே மிச்சம் வைப்பார்.
கௌதம் மேனனிடமிருந்து சரியான பதில் வராமல் போனதால், தன்னுடைய சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை கலைத்துவிட்டு, க்ளீன் ஷேவ் செய்து கொண்டுவிட்டாராம் விக்ரம். அது மட்டுமல்ல, வரும் 10 ஆம் தேதி முதல் விஜய் சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்திற்காகவே இந்த கெட்அப் மாற்றம் என்கிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
