Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல தளபதியை வம்புக்கு இழுக்கும் சியான் ரசிகர்கள்.. ஆதித்யா வர்மா அட்டகாசம்
நேற்று சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்கு அனைவரிடமும் நல்ல பாசிடிவ் விமர்சனம் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் திடீரென சியான் விக்ரமின் ரசிகர்கள் தேவையில்லாமல் தல தளபதி ரசிகர்களை வம்புக்கு இழுத்து உள்ளனர். அதாவது துருவ் விக்ரம்க்கு அடிக்கப்பட்ட போஸ்டரில், நீ தலயாக இரு, தளபதியாக இரு, எங்க குட்டி சியான் வரும்போது தலைமறைவாய் இரு என பதிவிடப்பட்டிருந்தது.
இதனை கண்ட தல தளபதி ரசிகர்கள் சும்மா இருப்பார்களா. சியான் விக்ரமின் ரசிகர்களை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். அப்பாவை வைத்து முன்னுக்கு வரும் நடிகர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என தல ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஆனால் இருவருக்கும் சம்பந்தமே இல்லாத சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தேவையில்லாமல் குரல் கொடுத்துள்ளனர். காரணம் பிரின்ஸ் துருவ் விக்ரம் என்ற வாசகம் தான். பிரின்ஸ் என்றால் அது எங்க சிவகார்த்திகேயன் அண்ணன் தான் என அவர்கள் ஒரு பக்கம் சவுண்டு கொடுத்து வருகின்றனர்.
