vikram-new
vikram-new

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சியான் விக்ரம், இவரது தனித்துவம் மிகுந்த நடிப்பு அனைவரிடமும் இவரை கொண்டு சென்றது. சேது படம் மூலம் இவருக்கு அந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயரான சியான் என்ற பெயரை பின்பு திரைத்துறையில் அவருக்கு சியான் விக்ரம் என அனைத்து படங்களிலும் திரையில் பிரதிபலிக்க பட்டன.

அதிகம் படித்தவை:  மீண்டும் உடம்பை மாற்றும் விக்ரம்! அடுத்த படம் என்ன தெரியுமா?
vikram
vikram

தமிழ்நாட்டில் சமீபத்தில் வந்த  கஜா புயலால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரைத்துறையினர் பலர் நன்கொடைகளை கொடுத்து உதவி வருகின்றனர், சிவகுமாரின் மகனான நடிகர் சூர்யா மற்றும் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விஜய் இவர்கள் நன்கொடைகளை கொடுத்து தமிழக மக்களுக்கு உதவினார். அந்த வரிசையில் சியான் விக்ரம் தரப்பிலிருந்து நன்கொடை கொடுத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  மலையாள நடிகர்களை கவர்ந்த "சீயான்" விக்ரம்!

கஜா புயலால் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன மற்றும் தென்னை மரம், மாமரங்கள் ,மின்சாரம் போன்றவை சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர்களுக்கு உதவும் வகையில் சியான் விக்ரம் தரப்பில் இருந்து ரூபாய் 25 லட்சம் தமிழக மக்களுக்காக கொடுத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.