விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும் CavinKare குரூப்பின் ஓனர் ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்துக்கும் அடுத்த மாதம் 10-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

விக்ரமின் மருமகன் மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேரன் ஆவார். அதாவது இவரது தாயார், கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மகள்.

மனு ரஞ்சித்தின் தங்கையும் விக்ரமின் மகளும் அமெரிக்காவில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் சென்னையில் அடிக்கடி மனு ரஞ்சித்தின் வீட்டில் சந்தித்துக் கொள்வார்கள். அப்போதுதான் மனு ரஞ்சித்துக்கும் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நண்பர்களாக பழகிய இவர்கள் தம்பதியர்களாக மாற வேண்டும் என விரும்பியது விக்ரம் குடும்பம்தானாம். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.