நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேரனும், மு.க.முத்து-சிவகாம சுந்தரி தம்பதிகளின் மகள் வழிப் பேரனும், கெவின் நிறுவன இயக்குனர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதிகள் மகனுமான மனு ரஞ்சித்துக்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர்.

அதிகம் படித்தவை:  பிரமாண்டமான இருமுகன் படத்தின் டீசெர் தேதி இதோ !

இந்த திருமண நிச்சயதார்த்த விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட விக்ரமிற்கு மிக நெருக்கமான நண்பர்களும், மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர்களும், மணமகள் அக்ஷிதாவின் தோழிகளும், மணமகன் மனு ரஞ்சித்தின் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதிகம் படித்தவை:  நயன்தாரா பைட்! நறுக்க சொன்ன விக்ரம்? இருமுகனின் மறுமுகம்!

திருமண தேதி பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. என்றாலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்தை தி.மு.கழக தலைவர் கருணாநிதி நடத்தி வைக்கிறார்.