fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் பஞ்சதந்திர பாய்ஸ் உடன் களமிறங்கிய விக்ரம் படக்குழு.. இணையத்தை மிரட்டும் வீடியோ

panja-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் பஞ்சதந்திர பாய்ஸ் உடன் களமிறங்கிய விக்ரம் படக்குழு.. இணையத்தை மிரட்டும் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள  படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் படத்தின் பிரமோஷனுக்காக வேலைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கமல், இயக்குனர் லோகேஷ் என பலரும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

கமலின் நண்பர்களான பஞ்சதந்திரம் பாய்ஸ் விக்ரம் படத்தில் படக்குழுவினருடன் பிரமோஷனுக்காக இறங்கியுள்ளனர். அதாவது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். இப்படத்தில் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன் ஆகியோர் கமலுடன் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது விக்ரம் படத்திற்கான பிரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் யூகி சேதுமனசஇ நியூஸ் பேப்பரை பார்த்து விட்ட உடனே மற்ற நண்பர்களுக்கு போன் செய்கிறார். உடனே காலையில் நியூஸை பார்த்தீர்களா என கேட்கிறார்.

நம்ம ராம் அதாவது கமல் போட்டோவ போட்டு இருக்காங்க என யூகி கூறுகிறார். அவரை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்று உள்ளதாக கூறுகிறார். உடனே பேப்பரை முழுவதுமாக யூகி பிரித்துப்பார்க்க விக் என கூறுகிறார்.

ஓ மாறுவேஷமா என ஜெயராம் கேட்க, ராமுக்கு முன்னால் விக் இருக்கிறது விக்ரம் என யூகி சொல்கிறார். மேலும் படித்துப் பார்த்தேன் ஆனால் பிரித்துப் பார்க்கவில்லை என எப்போதும் போல நையாண்டியுடன் பேசுகிறார். ரமேஷ் அரவிந்த் நேரடியாக கமலுக்கு போன் செய்கிறார். சிறிது நேரத்தில் ஹலோ என்ற கமலின் கர்ஜிக்கும் குரல் வர அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

Continue Reading
To Top