Connect with us
Cinemapettai

Cinemapettai

பாலாவின் முதுகுக்குப் பின்னால் வேலை பார்த்தாரா விக்ரம்? ஆதித்ய வர்மா படத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை இதுதான்!

vikram-bala-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலாவின் முதுகுக்குப் பின்னால் வேலை பார்த்தாரா விக்ரம்? ஆதித்ய வர்மா படத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை இதுதான்!

விக்ரமின் குருநாதர் என்றால் அது பாலா தான். ஆனால் அவரிடமே பகைத்துக் கொண்டதுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் விக்ரம் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த போது தானே வலியச் சென்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் தான் பாலா. அதுதான் சேது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்த பிதாமகன் திரைப்படமும் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. அந்தப்படமும் செம ஹிட்.

அதனால்தான் விக்ரம் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் நடிக்கும் முதல் படத்தையும் பாலா தான் இயக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று ரீமேக் படத்தை இயக்க வைத்தார்.

ஆனால் பாலா இயக்கிய படம் விக்ரமுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதேபோல் பாலாவுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்காமல் டபாய்த்துள்ளார் விக்ரம். இதனால் கடுப்பான பாலா, துருவ் விக்ரம் எதிர்காலம் கருதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தற்போது வரை பாலாவுக்கு அந்த பணத்தை செட்டில் செய்யவில்லையாம் விக்ரம். அது மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் ஹிட் கொடுத்த பாலாவையே படம் சரியாக இயக்கத் தெரியவில்லை என்று கூறியது பாலாவின் ஈகோவை டச் செய்து விட்டதாம்.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் பாலாவின் முதுகுக்குப் பின்னால் பேசியது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டது என்கிறார்கள்.

பாலா எதிர்பார்த்தது போலவே ஆதித்யா வர்மா படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு மாற்றாக தற்போது பாலா இயக்கிய வர்மா படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படம் வெளியான பிறகுதான் பாலாவின் அருமை புரியும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

விக்ரம் பாலாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் என்பதை எப்போதும் நம்பலாம். ஆனால் இருவருக்குள்ளும் சண்டை மூட்டி விட சில விஷ கிருமிகள் செயல்படலாம் என்கிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top