fbpx
Connect with us

வெட்கமில்லா பிரஸ்? விரட்டித் தள்ளிய விக்ரம்!

vikram-irumugan

வெட்கமில்லா பிரஸ்? விரட்டித் தள்ளிய விக்ரம்!

‘இருமுகன்’ படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தார் விக்ரம். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் ஏறக் கிளம்பியதுதான் தாமதம். முக்கால்வாசி சினிமா நிருபர்கள் அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள தவியாய் தவித்தார்கள். ஒருகட்டத்தில் அவர்களே வரிசையில் நின்று கொள்ள, ஒரு வசதியான இடத்தில் நின்று கொண்ட விக்ரம், ஒவ்வொருவராக வரச்சொன்னார். அதற்கப்புறம், ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வாரே… அந்த வேகத்தில் செயல்பட தொடங்கினார்.

‘நெக்ஸ்ட் நெக்ஸ்ட்’ என்று அவரே கழுத்தை பிடித்துத் தள்ளிக் கொண்டிருக்க, வெட்கமில்லாமல் சிரித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்தது கம்பீரத்தை நிலைநாட்ட வேண்டிய பிரஸ்.

இருமுகன் படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா என்று ஓடி ஓடி பேட்டி கொடுத்த விக்ரமிடம், அவ்வளவு அறிவுபூர்வமாக கேள்வி கேட்டு அசர வைத்தது அந்த ஊர் நிருபர் கூட்டம். இங்கோ, போட்டோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிடுவதற்கு பெரும் போராட்டம் நடத்துகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top