fbpx
Connect with us

Cinemapettai

கௌதம் மேனன் மீது கொலவெறியில் விக்ரம்.. உன் சாவுகாசமே வேண்டாம்டா சாமி என கும்பிடு போட்ட சியான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கௌதம் மேனன் மீது கொலவெறியில் விக்ரம்.. உன் சாவுகாசமே வேண்டாம்டா சாமி என கும்பிடு போட்ட சியான்

ஒரே ஒரு படத்தை கௌதம் மேனனிடம் கொடுத்துவிட்டு படாத பாடு படுகிறார் சியான் விக்ரம். அந்த படம் எப்போது வந்தாலும் சூப்பர் ஹிட் தான். ஆனால் வருமா என்பதுதான் சந்தேகமாக உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தற்போதைய நிலவரப்படி சீயான் விக்ரமுக்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை. இல்லையென்றால் வயதாகி விட்டது எனக்கூறியே அவரை ஒதுக்கிவைக்க ஒரு கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.

தற்போது விக்ரம் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 7 கெட்டப்புகளில் நடித்து வரும் கோப்ரா படத்தைத்தான்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் கதையை முழுவதுமாக முடிக்காமல் படப்பிடிப்புக்கு சென்று விட்டார் கவுதம் மேனன்.

அதுதான் இப்போது பஞ்சாயத்து ஆகியுள்ளது. கடைசியில் படத்துக்கு கிளைமாக்ஸ் இல்லாமல் 90 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளைமாக்ஸ் எப்படி அமைந்தாலும் சரி வரவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன்.

அதுமட்டுமில்லாமல் சொந்தப் படமாக தயாரித்த கௌதம் மேனன் கிட்டத்தட்ட விக்ரமுக்கு 4 முதல் 5 கோடி சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே சம்பளம் தரவில்லை படமும் எப்போது ரிலீஸ் என்று தெரியவில்லை என கவுதம் மேனன் மீது செம டென்ஷனில் இருக்கிறார் விக்ரம்.

இந்நிலையில் மீதி உள்ள படப்பிடிப்பு காட்சிகளுக்கு நான் நடிக்க வர மாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்து விட்டாராம். இதனால் தற்போது கவுதம் மேனன் என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருக்கிறார்.

Continue Reading
To Top