புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் விக்ரம் கூட்டணி.. HARD WORK ஓகே.. கம்பேக் கொடுப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தங்கலான். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார், ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படும், ஹாலிவுட் ரேஞ்சில் மிரட்டலாக வந்திருப்பதாக பலரும் கூறினர். விக்ரமின் அபார நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டாலும் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடவில்லை.

தற்போது சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, சித்திக் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் ஆக்சன் படமாக உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. எனவே இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நாளில் அஜித்தின் விடாமுயற்சி, ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் ரிலீசாகும் நிலையில், வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கலாம் என தெரிகிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகும் நிலையில் அடுத்தாண்டு இறுதிக்குள் வீர தீர சூரன் 2 ஆம் பாகம் வெளியாகும் என பேசப்படுகிறது.

பார்க்கிங் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்!

இந்த நிலையில், அடுத்து விக்ரம், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே பார்க்கிங் படம் சூப்பர் ஹிட்டான நிலையில் விக்ரம் அவரது கதையில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தக் கதை விக்ரமுக்கு பிடித்துப் போகவே, அடுத்து விக்ரமின் சம்பளம், கால்ஷீட் ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. வீர தீர சூரன் படத்தின் டப்பிங் முடிந்தபின், இப்புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பார்க்கிங் படம் மாதிரி இப்படமும் வித்தியாசமான கதையுடன், விக்ரமின் நடிப்புக்கு தீனி போடும் படமாக இருக்க வேண்டும், எல்லா படத்துக்கும் Hard work கொடுக்கும் விக்ரம் இப்படங்களின் மூலம் தூள் படம் மாதிரி கம்பேக் கொடுக்கனும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News