வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சார்பட்டா பரம்பரை பாணியில் உருவாகும் விக்ரம்-61.. கை பிடித்து தூக்கி விடும் இயக்குனர்

விக்ரம் நடிப்பில் கூடிய விரைவில் 3டி திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடித்து இருந்தனர்.

ஆக்ஷன்,மாஸ் திரைப்படமாக உருவாகியிருந்த மகான் திரைப்படம்,பெருமளவில் ரசிகர்களிடம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விக்ரமின் நடிப்பில் ரிலீசாக உள்ள கோப்ரா திரைப்படத்திற்காக காத்திருக்கும் வேளையில், இயக்குனர் ப.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இதனிடையே இத்திரைப்படம் பா.ரஞ்சித் இயக்கி கடந்த வருடம் வெளியாகி வெற்றிப்பெற்ற சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின், குத்துச்சண்டை கதையைப் போலவே விக்ரம் நடிக்கும் இத்திரைப்படமும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுக்க முழுக்க இத்திரைப்படத்தை 3 டி கிராபிக்ஸ் முறையில் எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு 3டி முறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தை போலவே விக்ரம் 61 திரைப்படம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ப.ரஞ்சித்திற்கும், விக்ரமிற்கும் 3டி திரைப்படம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் ரஞ்சித்துடன் கைகோர்த்து கூடிய விரைவில், இத்திரைப்படத்தில் நடித்து வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கியுள்ளார்.

மேலும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை இயக்கியுள்ள பா.ரஞ்சித், கூடிய விரைவில் விக்ரமுடன் சேர்ந்து விக்ரம் 61 படத்தை இயக்கவுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கழித்து 3டி திரைப்படம் வரவுள்ளது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News