Connect with us
Cinemapettai

Cinemapettai

mahaan

Videos | வீடியோக்கள்

நம்ம வச்சதுதான் சட்டம் நம்ம ஊத்துறது தான் சரக்கு.. விக்ரம் தாதாவாக மிரட்டும் மகான் பட டீசர்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இப்படத்தில் இவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். படத்தில் வில்லனாக விக்ரமும் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் விக்ரமின் கெட்டப் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு இல்லை. அதனால் படக்குழுவினர் இப்படத்தை அமேசான் ஒட்டி தளத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் விக்ரம் காந்திமகான் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுபானத்தை எதிர்த்த காந்தியின் பேரன் ஆக இருக்கும் விக்ரம் அதன் பிறகு முழுநேர குடிகாரனாக மாறுவதாக கதைகளத்தை அமைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top