ரிலீஸுக்கு முன்னரே கல்லா கட்டும் விக்ரம்.. சேட்டிலைட் உரிமத்தை தட்டி பறித்த பிரபல சேனல்

நடிகர் விக்ரம் தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கோப்ரா.

இப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படம் கடந்த 2020 இல் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

கோப்ரா படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதாவது மே 26 ஆம் தேதி கோப்ரா படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி ஒன்று கைப்பற்றியுள்ளது. தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி வந்த நிலையில் தற்போது கோப்ரா படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

மேலும் விக்ரமின் மகான், துருவ நட்சத்திரம் படங்களின் சாட்டிலைட் உரிமையையும் கலைஞர் டிவி தான் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருந்தது. தற்போது தொடர்ந்து விக்ரமின் மூன்று படங்களையும் கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கோப்ரா படத்தை பார்க்க விக்ரம் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்