fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

3 மொழிகளில் உருவாகும் விக்ரமின் அடுத்த படம்.. கதையே கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

vikram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3 மொழிகளில் உருவாகும் விக்ரமின் அடுத்த படம்.. கதையே கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது திறமை மற்றும் விடா முயற்சி காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கெ தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் என்றால் அது விக்ரம் தான். இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை இவரின் பெயர் சொல்லும் படம் என்றால் அது சாமி படம் தான். இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான இப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படமாகும்.

விக்ரம் ஒரு நடிகர் மட்டுமல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்திருக்கும் விக்ரம் ஒரு படத்திற்காக மிகவும் கடுமையாக உழைப்பார். உடல் எடையை கூட்டுவது குறைப்பது என தனது உடலை வருத்தி நடிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் நடிகர் தான் விக்ரம்.

தற்போது இவர் நடிப்பில் துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் மகான் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர விக்ரம் மேலும் சில படங்களிலும் நடிக்க உள்ளார். அந்த வரிசையில் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள இந்த படம் நடிகர் விக்ரமின் 61 வது படமாம். மேலும் கோலார் தங்க சுரங்கத்தில் கேஜிஎப் பட பாணியில் உருவாக உள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாம்.

ரஞ்சித் இயக்கம் என்றால் சொல்லவா வேண்டும். மேலும் இப்படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. சமீபகாலமாக அதிகரித்து வரும் பான் இந்தியா படங்களின் வரிசையில் இந்த படமும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர இப்படத்திற்கு அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தாலும் ஒரே ஒரு வெற்றி படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார் விக்ரம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top