Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலக நாயகனை மிஞ்சும் விக்ரம்.. அடுத்த படத்தில் எத்தனை கெட்டப் தெரியுமா?
உலக சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலவிதமான கெட்டப்புகளில் நடிப்பதை ரசிகர்கள் பெரிதும் விரும்புவார்கள். அந்த வகையில் முதன் முதலில் தமிழ் சினிமாவுக்கு அடிபோட்டது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நவராத்திரி படத்தில் ஒன்பது கெட்டப்புகளில் மிரட்டியிருப்பார்.
அவரைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்புகளில் மிரட்டியிருப்பார். இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் சுமார் 20 வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார்.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கி நல்ல பெயர் பெற்றவர் அஜய் ஞானமுத்து. பெயரிடப்படாத இந்தப் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி செட்டி நடிக்கிறார்.
மேலும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
சபாஷ் விக்ரம் சார்.!
