திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

LCU-வை இதோட முடிச்சிடுவேன்.. எண்டு கார்டு போட்ட லோகி

கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்போது ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தினை இயக்கி வருகிறார். மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இளசுகளுக்கு பிடித்த இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் அவர் எடுத்துக்கொள்ளும் கதைக்களம்தான்.

இவர் இயக்கிய முதல் படமான மாநகரம் படமே திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்து இயக்கிய கைதி 2 படமும் ஒரு சிறப்பான திரில்லர் படமாக வெளிவந்தது. அதன்பின் மாஸ்டர், விக்ரம், லியோ என அதிரடி ஆக்சன் படஙக்ளை இயக்கினார்.

இதோட முடிச்சிடுவேன்

இவரின் படங்களின் கதை போதை மருந்து மற்றும் கேங்ஸ்டர் இரண்டும் கலந்தே இருக்கும். மேலும் ரசிகர்கள் எப்போது தான் ஒரு பீல் குட் படத்தை எடுப்பீர்கள் என்றும் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் தற்போது தலைவர் 171 படமான கூலியை இயக்கி வருகிறார்.

இது LCU இல்லை என்று லோகி சொன்னாலும், LCU-வாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ் பேசியது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில் அவர் கூறியதாவது, “”நான் அடுத்தது கைதி 2 திரைப்படத்தையும் ரோலக்ஸ் திரைப்படத்தையும் இயக்க இருக்கிறேன். ‘விக்ரம் 2’ படத்துடன் எல்.சி.யு முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இது தான் ரசிகர்களுக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

LCU-வின் ஆரம்பத்தை ஏற்கனவே ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுத்து வருகிறார் லோகி. இந்த நிலையில் இவர் போகும் ஸ்பீடை பார்த்தல் ரசிகர்களுக்கு, அதுக்குள்ள முடிஞ்சிடுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News