Tamil Cinema News | சினிமா செய்திகள்
அன்பு கட்டளை போட்ட விக்னேஷ் சிவன்.! ஏற்க்க மறுத்த தமிழ்ராகர்ஸ்.! கொதித்து எழுந்த ரசிகர்கள்.!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக இன்று உலகெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் காமெடியில் யோகிபாபு கலக்கியிருக்கார்.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன் சில பிரச்சனையை சந்தித்துதான் திரைக்கு வந்தது ஆம் நடிகர் பிரசாந்த் அம்மா சாந்தி தான் தானா சேர்ந்த கூட்டம் ரீமேக் பண்ண கூடாது என வழக்கை தொடர்ந்தார் ஆனால் அந்த பிரச்சனையை படக்குழு உடைத்து வெளி வந்தார்கள்.
மேலும் தற்பொழுது அடுத்த பிரச்சனை வந்துள்ளது அது என்ன வென்றால் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் எப்பொழுதும் அனைத்து புதிய படத்தையும் அவர்களது இணையதளத்தில் வெளியிடுவார்கள் இதனால் படத்தை தயாரிப்பாளர் பெரிதும் பாதிக்க படுவார்கள்.
இந்த இணையதளத்தை முடக்குவதற்கு சங்கத்தலைவர் விஷால் ஏதேதோ செய்து பார்த்தார் ஆனால் அனைத்து முயற்சியையும் இணையதளம் முறியடித்தது பின்பு வழக்கும் தொடர்ந்தார்கள் அதுவும் கை கொடுக்கவில்லை.
பின்பு படத்தின் இயக்குனர்கள் ஒவ்வொருவராக தமிழ்ராக்ர்ஸிடம் கோரிக்கையை வைத்து வந்தார்கள் ஆனால் அதையும் அவர்கள் கேட்கவில்லை ஆனால் சென்னை 2 சிங்கபூர் படத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்றார்கள் அதேபோல் அந்த படத்தை மட்டும் இணையத்தில் இருந்து நீக்கினார்கள்.
இந்த முறையை இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த யுத்தியாய கையில் எடுத்துள்ளார் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்,ஆனால் அவர் படத்திற்கு மட்டும் இல்லை, தானா சேர்ந்த கூட்டம்,ஸ்கெட்ச்,குலேபகவாலி என தற்பொழுது திரையில் ஓடும் அனைத்து படத்திற்கும் கேட்டுள்ளார்.
அதில் தமிழ்ராக்ரஸ் டீம் இதையம் இருந்தால் படத்தை இணையத்தில் விடாதிர்கள் என கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நாங்கள் அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம் என கூறியுள்ளார்.
இப்படி சொல்லும்போது தான் தமிழ் ராக்கர்ஸ் தீயா வேலை செய்வங்கா பாஸ் விஷயம் தெரியாத ஆளா இருக்கீங்களே.
