fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தாறுமாறாக வெளியான சீயான்60 அப்டேட்.. இணையத்தை தெறிக்கவிடும் விக்ரம் புள்ளிங்கோ!

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாறுமாறாக வெளியான சீயான்60 அப்டேட்.. இணையத்தை தெறிக்கவிடும் விக்ரம் புள்ளிங்கோ!

கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு பிறகு விக்ரம் தனது 60வது படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை யார் இயக்குகிறார்கள், யார் இசையமைப்பாளர் என்கிற விவரத்தை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் நடிக்கும் சியான்60 வது படத்தை பேட்ட, ஜகமே தந்திரம் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளி வந்துள்ளது. இதில் நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளது போஸ்டரிலேயே தெரிகிறது.

அதே போல் இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை எழுதி இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் உடன் அனிருத் மீண்டும் கைகோர்க்கிறார்.

துருவ் விக்ரம் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது. இத்தனைக்கும் அந்த படத்தை பார்த்து பார்த்து ரெடி செய்தவர் விக்ரம் தான். நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தன்னுடன் சேர்த்து மகனையும் வியாபார ரீதியாக பெரிய ஹீரோவாக மாற்ற இந்த யுத்தியை பயன்படுத்தியுள்ளார் விக்ரம். படத்துக்கு அனிருத் இசை பெரும் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் கோப்ரா படம் வெளியானாலும் பெரிய அளவு வசூல் இருக்குமா என்பது சந்தேகமே. அதனை புரிந்து கொண்டு அதே தயாரிப்பாளருக்கு தன்னுடைய அடுத்த படத்தையும் கொடுத்த விக்ரமை கோலிவுட் வட்டாரங்களில் பாராட்டி வருகின்றனர்.

chiyaan60-annoncement

chiyaan60-annoncement

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top