Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை சாவித்திரி பற்றிய ட்வீட் ! கடுப்பான நெட்டிசன்கள், பதிலடி கொடுத்த விஜய் தேவர்கொண்டா !
விஜய் தேவர்கொண்டா
தெலுங்கு சினிமா என்ற வரையறையை தாண்டி இந்தியா முழுவதும் ரீச் உள்ள மனிதர். இதுவரை இரண்டு படங்கள் தான் ரிலீஸாகியுள்ளது. பெல்லி சூப்புலு படம் இவருக்கு நல்ல என்ட்ரி என்றால், அர்ஜுன் ரெட்டி தான் பிரேக் த்ரூ கொடுத்தது. அடுத்ததாக டாக்ஸிவாளா என்ற படமும், நடிகை சாவித்திரியின் பயோபிக்கான ‘நடிகையர் திலகமும்’ ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் விஜய்.
ட்விட்டரில் சர்ச்சை

Mahanathi
மனிதர் தன் ட்விட்டர் பக்கத்தில், படத்தின் ப்ரோமோ போஸ்டர் ஒன்றை ஷேர் செய்தார். அந்த போஸ்டரில் சாவித்திரி அவர்களுக்கு கார் ரேஸிங் பிடிக்கும் என்றும், அந்த காலகட்டத்தில் சென்னையில் அதிக வின்டேஜ் கார் வைத்திருந்தவர் என்ற வாசகமும் இருந்தது.
What a cool chick.#Mahanati pic.twitter.com/8di3WUWXfZ
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 23, 2018
அந்த டீவீட்டிற்கு கூல் சிக் என்று அவர் தலைப்பு வைத்தது தான், விவாதப்பொருள் ஆனது. ஒருபுறம் மீம்ஸ் போட்டு கலாய்ப்பது, கமெண்டில் கழுவி ஊத்துவது என்று சமூகவலைத்தளங்களில் பல சர்ச்சை ஆரம்பித்தது. மறுபுறம் விஜய் தேவர்கொண்டா மன்னிப்பு கேக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் கூற தொடங்கினர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் தேவர்கொண்டா சரமாரியாக டீவீட்டினார்..
All who want an apology – chennai Leela Palace lo unna ocheyandi. I will even be giving you #Mahanati audio launch entries. She would have been happy to have you all back then – because appudu me lanti morals and ethics batch called her a home breaker and alcoholic,
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 24, 2018
சென்னை லீலா பாலஸ் தொடங்கி ஆந்திரா வரை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்பவர்களே, உங்கள் அனைவருக்கும், நான் இசை வெளியீட்டுக்கு டிக்கெட் தருகிறேன். இன்று இவ்வளவு பேசுகிற நல்லவர்கள் கூட்டம் அன்று எங்கு சென்றீர்கள். அவரை குடும்பத்தை கெடுப்பவர், குடிப்பவர் என்று தானே பேசினீர்கள்.
சாவித்திரி பல விஷயங்களின் சங்கமம். பயமரியாதவர், தாராள மனம் கொண்டவர், மேலும் தன் கனவுகளை முதன்மை படுத்தி உழைத்தவர். அனைவரிடமும் அன்பு செலுத்தியவர், பிறர் அன்புக்கு அடிபணிபவர். அதன் பிறகு தான் சூப்பர் ஸ்டார்.
she was many things fearless, philanthropic, generous, but at her core she was like anyone else a girl with dreams first, a woman who loved & wanted to be loved next and a superstar last. #MahanatiOnMay9th
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 24, 2018

Mahanathi
I think she would have been super happy to be called in admiration "what a cool chick" ☺ compared to home wrecker and alcoholic.
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 24, 2018
நான் நினைப்பது என்ன வென்றால், மகிழ்ச்சியாக அவர் என் பாராட்டை ஏற்றுக்கொள்வர், நீங்கள் சொன்னதுக்கு இது எவ்வளவோ மேல்.
இதோடு முடித்துக்கொள்ளாமல், மேலும் ஒரு படி சென்று, நான் என்ன போஸ்ட் போடா வேண்டும் என்று நினைப்பவர்கள், அட்மின் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். அந்த வகையில் உங்களுக்கு வேலையாவது கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
But if you want to decide how I write my posts and think you know better – you can apply for the post to "[email protected]". That way you'll also get a job.
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 24, 2018
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
மனதில் பட்டத்தை பளீச்சென்று பேசும் விஜய், இது போன்ற நெகட்டிவ் விஷயங்களை கண்டு பின் வாங்காமல், பதிலடி கொடுத்தது அணிவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
