Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில்தான் வாய்ப்பு இல்லை.. ஆனா சீரியலில் நடிகைக்கு வந்த வாழ்வு
பிரபல சீரியல் நடிகை கார் வாங்கியுள்ளார். விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகையான ஆயிஷா ஹோண்டா கார் வாங்கியுள்ளார். இவர்பொன்மகள் வந்தால் எனும் சீரியலில் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர். இவர் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். இவர் சமூக வலைதளங்களில் போடும் வீடியோ காட்சிகள் இளைஞர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது .
இவர் விஜய் டிவியின் மனக்கசப்பால் வெளியேறினார் என்பது அவரே தன் வாயால் உறுதிபட கூறியுள்ளார். இருப்பினும் தன் நடிப்பை மக்களுக்கு காட்டுவதற்காக பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் மாயா எனும் தொடரில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்து சில மாதத்திலேயே கார் வாங்கியுள்ளார். அது அனைவராலும் ஆச்சரியபட படுகிறது.
இவர் சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு என்னும் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தும் பொன்மகள் சீரியலில் நடித்த காரணத்தால் அந்த வாய்ப்பை இழந்தார். இருப்பினும் தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவதாக அவரைச் சுற்றியுள்ள நண்பர்கள் உறவினர்களால் கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும் சினிமாவில் நடிப்பதை அவரது லட்சியமாக கொண்டு உள்ளார்.
