Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுருட்டை முடி ஹேர் ஸ்டைலை மாற்றிய விஜய் டிவி புகழ்.. செம மாஸா இருக்கியேப்பா!
ஒரு சில காமெடி நடிகர்களை வைத்துக்கொண்டுதான் விஜய் டிவி இவ்வளவு நாட்களாக காலம் தள்ளி வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்திய காமெடி கிங்காக வலம் வருபவர் புகழ்.
இவருடைய எதார்த்தமான காமெடிகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் கூடிவிட்டது.
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.
அதில் நடிகை ரம்யா பாண்டியனிடம் வழியும் கதாபாத்திரமாக கலந்து கொண்ட புகழ் அதன் மூலம் பல ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
விஜய் டிவி புகழுக்கு இன்னொரு புகழ் என்றால் அது அவருடைய தலை முடி தான். சுருட்டை முடியுடன் வலம் வந்த விஜய் டிவி புகழ் தற்போது தன்னுடைய முடியை ஹேர் ஸ்டைலிங் செய்துவிட்டார்.

vijay-tv-pugazh
இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
