இந்தா ஆரம்பிச்சாட்டங்கல்ல, என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வையாபுரி கதறி அழுவதை போன்ற காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
பிக்பாஸ் நிகழ்ச்சின் 3ம் நாள் நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காட்டப்படுகிறது. அதன் முன்னோட்டமாக ஒரு வீடியோ இன்று விஜய் டிவியால் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், பிக்பாஸ் பங்கேற்பாளர் வையாபுரி அழுவதை போன்ற காட்சி இருப்பதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் வையாபுரியும் ஒருவர். அவர் கதறி, கதறி அழுவதை போன்ற காட்சி வீடியோவில் உள்ளது. அவரை ஜூலியானா தேற்றுவதை போல காட்சியுள்ளது. இதனிடையே, நடிகை காயத்ரி “இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன். எனக்கு யார் அவங்க” என்று கூறுகிறார். இதையடுத்து வையாபுரி கதறி, கதறி அழுவதை போல காட்சி காண்பிக்கப்படுகிறது.

யாருமே எனக்கு தேவையில்லை எனவும் கூறுகிறார் காயத்ரி.
கதறியழும் வையாபுரியை பார்த்து, “ஒன்னுமில்லண்ணே, ஒன்னுமில்லண்ணே” என ஆறுதல்படுத்துகிறார் ஜூலியானா. செட்டிலுள்ள மேலும் சிலரும் கண்ணை கசக்குகிறார்கள்.

டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பவர்கள் அழுவதை போன்ற காட்சி காண்பிக்கப்படுவது காலம்காலமாக நடக்கிறது. கவண் திரைப்படத்தில் கூட அதன் பின்னணியை காட்டியிருப்பார்கள். எனவே வையாபுரி அழுவதை பார்த்து, “இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல” என்கிறார்கள் நெட்டிசன்கள்.