ஏற்கனவே, சிவாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் கொஞ்சம் உரசலாகத்தான்.

றெக்க ஆடியோ வெளியீட்டு விழாவில்…விஜய் சேதுபதிக்கு வாய்த்த பேனர்களில் ஒரு பேனர் “டிவி புகழை வச்சி ஜெயிச்சவன் இல்லடா…என் தலைவன், தானா உழைச்சி முன்னுக்கு வந்தவன்” என்று எழுதி பெரிதாக வைக்கப்பட்டு இருந்ததாம்.

விழாவில் கலந்துகொண்ட விஜய்சேதுபதிக்கு இது முதலில் தெரியவில்லை. விழா முடிந்து வண்டியில் ஏறும்போது கவனித்து பயங்கர ஷாக் ஆயிட்டாராம். “நானே யார் கூடவும் போட்டி போடாமல் என் வேலை யை பார்க்கணும்னு நினைக்கிறேன் . இப்படி ஒரு பேனரா?” ன்னு கடுப்பானாராம்.

உடனே, அந்த பேனர் வைத்த ரசிக கண்மணிகளை அழைத்து..” என்னையை பாராட்டணும்னா …பாராட்டு. அதுக்கு எதுக்கு அவரை சண்டைக்கு இழுக்கிற? சிவகார்த்திகேயனை திட்டிதான் நீ என்னை பாராட்டணுமா?” ன்னு திட்டி, “இனிமே இப்படி பண்ணாதீங்கப்பு..”ன்னு சொல்லி அனுப்பி வைத்தாராம்.

அப்படியாப்பட்ட விஜய்சேதுபதி அடுத்த ஒரு மாசத்தில, ஒரு பேட்டியில். “நான் அதிர்ஷ்டத்தால் வளர்ந்தவன் இல்லை. நான் வளர்வதுக்கு காரணம் என் உழைப்பு. அதிர்ஷ்டம் முன்னேற்றத்தை தராது” ன்னு அடித்து பேசினார்.

இப்போ, லேட்டஸ்ட்டா ஒரு சம்பவம்!

விஜய் சேதுபதி கருப்பன் என்ற படத்தில் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, பன்னீர்செல்வம் இயக்கத்தில் நடிச்சிட்டு வரார் இல்லையா? அந்த படத்தின் முதல் செட்யூல் இப்போ தான் முடிஞ்சிருக்கு. அடுத்த செட்யூலுக்கு ராம்ஜி வரமாட்டேன்னுட்டாராம்.

காரணம்? பெரிய பட்ஜெட் சிவகார்த்திகேயன் படத்துக்கும் ராம்ஜி தான் ஒளிப்பதிவு. அதனால், அந்த படத்துக்கு நான் போறேன்னுட்டார். அதனால் கருப்பனுக்கு ஷக்தி ஒளிப்பதிவாளராக ஆகியுள்ளார்.