நடிகர் விஜய் சேதுபதி இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் தொழில் வாழ்க்கையை கணக்காளராகத் தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்தார். 2010இல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார்.vijaysethupathi

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பை பிரபலங்கள் கூட பாராட்டிவருகின்றனர். வருடத்திற்கு 6 படமாவது கொடுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனாலும் அடுத்த வருடத்திற்கு உண்டான படங்கள் கூட இப்போது இவரின் கைகளில். சமீபத்தில் இவர் நடித்த புரியாத புதிர் நீண்ட நாள் தடைகளுக்கு பிறகு வெளியானது.

அதற்கு முன் வெளியான விக்ரம் வேதா இவருக்கு வெற்றி கொடுத்தது. இனி இம்மாதம் 29 ம் தேதி இவர் நடித்துள்ள கருப்பன் படமும் ரிலீஸ்க்கு ரெடி. இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.தற்போது படங்களில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கி வரும் இவர் தொடர் வெற்றிகளால் தன் சம்பளத்தை ரூ 9 கோடிக்கு உயர்த்திவிட்டார் என சொல்லப்படுகிறது.vijaysethupathi

பிசியாக இருக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்தால் போதும் கூடுதலாக ரூ 1 கோடி சேர்த்து 10 கோடியாக கொடுக்கலாம் என தயாரிப்பாளர்கள் சிலர் காத்திருக்கிறார்களாம்.