Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss பாணியில் விஜய்சேதுபதி நடத்தப்போகும் மாபெரும் நிகழ்ச்சி.யாருக்காக தெரியுமா..!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

biggboss பாணியில் விஜய்சேதுபதி நடத்தப்போகும் மாபெரும் நிகழ்ச்சி.யாருக்காக தெரியுமா..!!!

நெடுவாசல், கதிராமங்கலம் என விவசாயிகளுக்கு எதிராகவும், விவசாயத்தை அழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் தொடங்கிவரும் திட்டங்களை எதிர்த்து விவசாயிகளும் தென் தமிழக மக்களில் பலரும் போராட்டங்கள் நடத்திவந்த சமயத்தில், அனைவரது கவனத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சி தனது பக்கம் திருப்பிக்கொண்டது. பல வருடங்களாக போராட்டம் ஒன்றையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு இளைப்பாறும் இடமாக மாறிவிட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வழியிலேயே சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்து களத்தில் இறங்கியிருக்கின்றனர் ‘நம்ம விவசாயம்’ குழுவினர்.

காஞ்சிபுரம் அருகே 5 ஏக்கர் நிலப்பரப்பில் இதற்கான வேலை துவங்கப்பட்டிருக்கிறது. விவசாயத்தில் நெல் கதிருக்கான நாற்று நடுவதில் ஆரம்பித்து, கதிர் அறுவடையாகும் வரை அவர்களின் செயல்களை படம்பிடித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர். விவசாயத்தில் நெல் நாற்று நடுவதில் ஆரம்பித்து கதிர் அறுவடையாகும் வரை அவர்களின் செயல்களைப் படம்பிடித்து ஒளிப்பரப்ப உள்ளனர். இதில் நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, நாட்டு மருத்துவம் மற்றும் பண்டைய வீர விளையாட்டுகளை காண்பிக்க உள்ளனர். இதற்காக குடிசை வீடுகள் போன்ற செட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதில் போட்டியாளர்களாக பிரபல நடிகர், நடிகைகளும் பிரதுறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். இதனை திரைப்பட கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்க நம்ம மூவிஸ் சார்பாக ஆர்.கே தயாரிக்கிறார். நாட்டில் ஒரு நல்ல காரியம் நடக்கிறதென்றால் அதற்கு முதல் மரியாதை செய்யத் துடிப்பவர் விஜய் சேதுபதி என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக அவர்தான் இந்த நிகழச்சியை தொடங்கி தொகுத்து வழங்க இருக்கிறார்.vijay

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ‘கொலை விளையும் நிலம்’ என்றொரு விவசாயம் தொடர்பான ஆவணப்பட வெளியீட்டுக்கு வந்திருந்து அந்த படத்தின் பரவலான பார்வைக்கு சிறு உதவியாக இருந்தார் விஜய் சேதுபதி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top