‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி தற்போது, `சூப்பர் டீலக்ஸ்’, `96′, `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் `சீதக்காதி’, `சயீ ரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் `ஜுங்கா’ படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாரீஸில் தொடங்கிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தொடர்ந்து 30 நாட்கள் நடக்க இருக்கிறது.

கவண், விக்ரம் வேதா என இந்த வருடத்தில் மட்டுமே இரண்டு பாக்ஸ் ஆபீஸ் சூப்பர்ஹிட்களைக் கொடுத்த விஜய்சேதுபதியின் சமீபத்திய ரிலீஸான ‘கருப்பன்’ படமும் பி அன்ட் சி சென்டர்களில் ஓரளவுக்கு எதிர்பார்த்த வசூலைக் குவித்துள்ளது.

ஸ்ரீசாய்ராம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் கருப்பன். விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்த படம் கருப்பன்.

பசுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படத்தை ரேணிகுண்டா பன்னீர்செல்வம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘ஜுங்கா’ படத்திற்காக பாரிஸ் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கூட்டணியான இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் விபின் சித்தார்த் ஆகியோருடன் ‘ஜுங்கா’வில் கைகோர்த்துள்ளார் விஜய் சேதுபதி.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே படத்தின் விநியோக உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கி கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் தள்ளியது ஏ அன்ட் பி குரூப் நிறுவனம்.

‘ஜுங்கா’வைத் தொடர்ந்து இப்போது விஜய்சேதுபதின் இன்னொரு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையும் வியாபாரமாகியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றியுள்ளது ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம்.

இப்படம் சாகஸங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஃபேன்டஸி காமெடிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.