Tamil Cinema News | சினிமா செய்திகள்
முக்கிய தலைவரின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி!
சென்னை: ‘தர்மதுரை’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கைக்கோர்த்துள்ள விஜய் சேதுபதி, தென்னிந்தியாவின் முக்கிய தலைவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதுப்படத்துக்கு ‘மாமனிதன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தென் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரது வாழ்க்கை வரலாற்று கதை என கூறப்படுகிறது.
இதற்கான கதையை எழுதி முடித்துள்ள இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியின் தேதிக்காக காத்திருக்கிறாராம். கடந்த ஆண்டை போலவே கைவசம் 4-5 படங்கள் வைத்துள்ள விஜய் சேதுபதி இன்னும் ஓரிரு மாதங்களில் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது, இயக்குனர் இப்படத்துக்கான நாயகி தேடும் படலத்தை துவக்கியிருப்பதாகவும் தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
