மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் எதிர்பாராத தோல்வி அடைந்ததால் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதற்காக இந்த முறை அவர் ஒரு நட்சத்திர கூட்டத்தையே அணி திரட்டியுள்ளார்.ஏற்கனவே மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் மற்றும் இரண்டு நாயகர்கள் நடிக்கவுள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகா அறிமுகமாகிறார்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியா? அல்லது வேறு கேரக்டரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி சினிமாவில் உச்சத்தை அடைவதற்கே பிக்பாஸ் பரணி தான் காரணம்.! இது தெரியுமா?

மணிரத்னம் தயாரித்த ‘டும் டும் டும் படத்தில் ஜோதிகா நடித்திருந்தாலும், அவரது இயக்கத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் ஜோதிகா இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை