fbpx
Connect with us

Cinemapettai

விளம்பரத்தால் வினை! விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.. சில்லறை வணிகர்கள் கொதிப்பு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விளம்பரத்தால் வினை! விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.. சில்லறை வணிகர்கள் கொதிப்பு!

சென்னை: ஆன்லைன் பொருட்களை வாங்க பயன்படும் செயலி விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில்லறை வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விஜய் சேதுபதிக்கு எதிராக அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்ட நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான மண்டி என்ற செயலியின் விளம்பரத்தில் அண்மையில் நடித்திருந்தார்.

இந்த விளம்பரம் இப்போது தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த விளம்பரத்தில், பொருட்களை ஆன்லைனில் வாங்கலாம் என்பது போல் விஜய்சேதுபதி பேசுவார்.

இந்நிலையில் இந்த விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதற்கு சில்லறை வணிகர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளது. இது குறித்து அச்சங்கம் சார்பில் வெளியாகி உள்ள அறிக்கையில், சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு துணை போகும்.

நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராம போகிறோம்.. நவம்பர் 04-ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலத்தை கொளத்தூர் த.ரவி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top