அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும், மாஸ் கலந்த காமெடி படம் தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், ரமேஷ் திலக், நிஹாரிக்கா கோனிடேலா (இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சொந்தக்காரப் பெண், தமிழில் அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  ரிலீஸ் ஆனது பற்றி நாம் முன்பே நம் தளத்தில் பார்த்திருந்தோம். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல கெட்- அப்களில் நடிப்பதாக தெரிகிறது. இப்படக்குழு அந்த போட்டோக்களை இன்று வெளியிட்டது, அதுவே இப்பொழுது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

மக்கள் (மாஸ்) செல்வன், அசத்துகிறாரே பா என்று வியந்து, இப்போடோக்களை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.