News | செய்திகள்
விஜய் சேதுபதியின் பலரும் அறியா திரைப்படங்கள்
ஒரு துணை நடிகராய் தனது திரைப்படப்பயணத்தை ஆரம்பித்து தற்போது அனைவரும் ரசிக்கும் வெற்றிப்பட ஹீரோவாக பிரகாசிக்கும் நடிகர்தான் விஜய் சேதுபதி.
இவர் எந்தவித ஈகோவும் இல்லாமல் பல சக நடிகர்களின் படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அவ்வாறு திருடன் போலீஸ் திரைப்படத்திற்கு பிறகு அவர் கௌரவ வேடத்தில் நடிக்கும் படம் விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் கதாநாயகன்.
பல வெற்றிகளை கண்டுவிட்ட விஜய் சேதுபதியின் திரைப்பட பயணத்தில் நாம் பலரும் அறியா சில படங்கள் உள்ளன. இவை அனைத்தும் விஜய் சேதுபதி துணை நடிகராக இருந்தபோது நடித்தது.
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு
எம் குமரன் சன் ஆப் மகாலெக்ஸ்மி (பாக்ஸின் பார்வையாளராக வருவார்)
டிஷ்யூம்
புதுப்பேட்டை (ரௌடிகளில் ஒருவராக வருவார்)
லீ (கால்பந்து வீரராக வருவார்)
அஞ்சாதே
வெண்ணிலா கபடிக் குழு (கபடி போட்டியாளராக வருவார்)
நான் மகான் அல்ல (கார்த்தியின் நண்பனாக வருவார்)
பலே பாண்டியா (விஷ்ணுவின் அண்ணனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார்)
சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அஞ்சாதே படத்துல நடிச்சுருக்காரா!!!
