Photos | புகைப்படங்கள்
விஜய் சேதுபதியின் பட பூஜைக்கு செமி – ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்து அசத்திய காயத்ரி. வைரலாகுது போட்டோஸ்.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ரெடியாகும் துக்ளக் தர்பார் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து வயகாம் 18 ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றனர். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். 96 பட இயக்குனர் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் வசனங்களை எழுதுகிறார்.
இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. படத்தில் நடிப்பவர்கள், டெக்கனிகள் டீம் மட்டுமன்றி சினிமா துறை பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் நட்பின் அடிப்படையில் இப்பட பூஜைக்கு காயத்திரியும் வந்துள்ளார். அவர் செமி ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

Vijay Sethupathi – Gayathrie
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, மாமனிதன் என ஏழு முறை இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

thuglaq durbar gayathrie
