Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியிடம் இனி பேச்சுவார்த்தை கிடையாது விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி திரிஷா நடித்த 96 படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய விஜய் சேதுபதி பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 20 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் பொழுது நடக்கும் கதைதான் இந்த படம். ஒரு இரவில் நடக்கும் கதையாக இந்தப் படம் இருக்கும் என்று கூறினார்.
திரிஷா நயன்தாரா தமன்னா இவர்கள் அனைவரும் மிகப்பெரும் கடின உழைப்பாளியாக இருக்கின்றனர் அவர்களைப் பார்த்து கண்டிப்பாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் மணிரத்னம் படத்தில் நடித்தது ஒரு காட்டாற்று வெள்ளத்தில் பயணம் செய்தது போல் ஒரு அருமையான பயணமாக இருந்தது அவர் அளவுக்கு எந்த இயக்குனரும் யோசிக்க மாட்டார் அவ்வளவு வேகமாக யோசிப்பார் என்று கூறினார்.
ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக நடிப்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை அவரிடம் நடிப்பதே பெரிய விஷயம். அவர் நேற்று சினிமாவிற்கு வந்து இந்த படத்தை நம்பி தான் அவர் எதிர்காலம் இருப்பது போன்று உழைக்கிறார். ஷூட்டிங்கில் அவரிடம் பேசுவது சற்று பயமாகவே இருக்கும் ஏனென்றால் அவர் சாதாரணமாகவே ஸ்டைலாக தான் பேசுவார் அவரிடம் பேசும்போது கண்டிப்பாக அவருடைய சாயல் நமக்கே தெரியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். எனவே அவரை சந்திப்பதை நான் நிறுத்திவிட்டேன். இப்பொழுது ரஜினியை பார்ப்பதுமில்லை பேசுவதும் இல்லை என்று கூறினார்.
