Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்கு ஆதரவா களமிறங்கிய விஜய் சேதுபதி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். விஜய் போன்ற பெரிய நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தால் இளைய சமுதாயம் புகையால் சீரழிய வாய்ப்புகள் அதிகம் என்றும் அதனால் பெரிய நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரபல அரசியல்வாதிகள் கூறினர்.
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ‘ஜூங்கா’ பட புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய்சேதுபதி, விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
சிகரெட் பிடிப்பது தொடர்பாக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? என்றும், அதற்கு பதிலாக சிகரெட் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்றும் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். சிகரெட் கம்பெனியை மூடாமல் சிகரெட்டுக்கு எதிராக வாசகங்கள் மட்டும் திரையில் வைப்பதில் எந்தவித நன்மையும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் பலர் கூறிய கருத்தையே விஜய்சேதுபதியும் வழிமொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
